நடிகை கீர்த்தி சுரேஷ் - ஜெயலலிதாவாக நடிக்க எனக்கு தைரியம் இல்லை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க எனக்கு தைரியம் இல்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளதாக சமீபத்தில் மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் மற்றொரு தமிழ் நிறுவனமும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வருகிறது.
யார் தயாரித்தாலும் ஜெயலலிதாவாக நடிக்கப்போகும் நடிகை யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ்யிடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுவதையொட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான விஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை. அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என மறுத்துள்ளார்.