2.0 படம் - எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் கேள்வி?
ஷங்கர் இயக்கத்தில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2.0 படம் கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், டிசம்பரில் துபாயில் ஆடம்பரமாக பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்தனர். ஏப்ரல் மாதமே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டும் நடக்கவில்லை.
கடந்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் திரைக்கு வராமல், கிராபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. தள்ளிப்போனதால் காலா படத்தை ரிலீஸ் செய்து விட்டனர்.
படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை. இதுவே படம் தாமதத்துக்கு காரணம் என்கின்றனர்.
எப்போது 2.0 வெளியாகும் என்பது ரசிகர்களின் கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.