வீராட் கோலியின் மெழுகு சிலையின் காது பகுதி உடைந்தது
நேற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுவுள்ளது.
மெழுகு சிலைகளுக்கு பெயர் போன அருங்காட்சியகம் மேடம் துஸாட்ஸ், சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.
டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான காந்தி, அப்துல் கலாம், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வரும் கேப்டன் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை பல்வேறு கலைஞர்கள் சேர்ந்து, அறு மாதங்களாக வடிவமைத்துள்ளனர். அச்சு அசலாக, கோஹ்லியே நேரில் நிற்பதுபோல் இந்த மெழுகு சிலை உள்ளது.
இந்த மெழுகு சிலையை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி, அதன் மெழுகு சிலையை முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர். இதில் கோஹ்லியின் வலது பக்க காது சேதமடைந்துள்ளது.