சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சாதனைகளை படைத்துள்ளது !

நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. அதன் பின்னர் ஆடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சென்னை அணியும், அணி வீரர்களும் புதிய சாதனையை படைத்து இருக்கிறார்கள்.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற இரண்டாவது அணியாக சென்னை உள்ளது. இதுவரை சென்னை அணி 100 வெற்றிகளை பெற்றுள்ளது.

மும்பை அணி 105 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

நேற்றைய போட்டியில் டோனி 51 ரன் எடுத்தார். இதன்மூலம் ஒரு அணித்தலைவராக அதிக ரன் 3557 எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் காம்பீர் 3518 உள்ளார்.

இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் பெங்களூரு அணி இருக்கிறது.

சென்னை அணி நேற்று 211 ரன் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக முறை 200க்கும் அதிகமான ரன் எடுத்துள்ள அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. .

சென்னை இதுவரை 16 முறை 200 ரன்களை கடந்துள்ளது. அதேபோல் 200 ரன் இலக்கினை விரட்டிப் பிடிப்பதில் 90 சதவித வெற்றியை பெற்றுள்ளது.