ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் ஜஸ்டின் லேங்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மே 22-ம் தேதி முதல் பொறுப்பேற்கும் ஜஸ்டின் லேங்கர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியம் அறிவித்துள்ளது.
இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் என அனைத்து போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க்கிறார் ஜஸ்டின் லேங்கர்.
இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக மொத்தம் 105 டெஸ்ட் மற்றும் 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்டின் லேங்கர், டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்களுடன் 7500-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
ஜஸ்டின் லேங்கர் தலமையில் அடுத்த 4 ஆண்டுக் காலத்தில் 2 ஆஷஸ் கோப்பை தொடர், உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை ஆகிய போட்டிகளை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது.