டைரக்டர் பாரதிராஜா - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து போராட்டம்!
டைரக்டர் பாரதிராஜா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று "தடை அதை உடை" என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.
டைரக்டர் பாரதிராஜா இசை ஆல்பத்தை வெளியிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இது சுமார் 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் டைரக்டர் அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதற்கு அரசின் அணுகுமுறையே காரணம் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கிறோம்.
இது தொடர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தமிழக அரசின் நடவடிகைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இது அறவழியில் வித்தியாசமான போராட்டமாக இருக்கும். தமிழக அரசால் அந்த போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.