துப்பாக்கி சூடு குறித்து - நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன்

நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது, தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது வன்முறை வெடித்ததால், போலீசார் பொதுமக்கள் மீது தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். போலீஸ் தடியடியால் பலரும் காயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.