எஸ்.வி.சேகர் ஜூன் 20-ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் ஜூன் 20ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
எஸ்.வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
பெண் பத்திரிக்கையாளரை இழிவாக விமர்சித்து கருத்து பதிவுக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு இடங்களில் எஸ்.வி சேகர் மீது போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
எஸ்.வி சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது.
ஆனாலும் எஸ்.வி சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 50 நாட்களுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருக்கிறார்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் எஸ்வி சேகருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
வருகிற ஜூன் 20 ஆம் தேதி எஸ்.வி சேகர் நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.