பா.இரஞ்சித் - காலா ரஜினிக்கான அரசியல் படம் அல்ல !
காலா படம் மக்கள் பிரச்னைகளை கூறும் படம், ரஜினிக்கான அரசியல் படம் அல்ல என பா.இரஞ்சித் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும், இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.
அனைத்து ரசிகர்களும் ஒன்று சேர்ந்து காலா திரைப்படம் வெளியானதற்கு பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். ரசிகர்களின் உற்சாகத்தை இயக்குனர் பா.ரஞ்சித் திரையரங்குக்கு சென்றிருக்கிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித் சென்னை சத்தியம் திரையரங்கில் பேட்டி அளித்துள்ளார், அதில்
'காலா' படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக எடுக்கப்பட்ட படம் என கூறினார்.