ஹரிஷ் கல்யாண் ஜோடியாகும் ஷில்பா
பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'சிந்து சமவெளி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.
விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதன்பிறகுதான் ஹரிஷ் கல்யாண் மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.
தற்போது இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ரைஸா வில்சனுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன், தயாரித்தும் வருகிறார்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்க இருக்கிறார்.
'காளி' படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இது தான் ஷில்பாக்கு முதல் தமிழ் படம்.