இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி !
இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி நேற்று முதல் முறையாக தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கியது.
இந்த போட்டி பெங்களூரில் நடந்தது. இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கர் ஸ்டானிஸ்காய் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று 2வது நாளான இந்திய அணி 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஆப்கன் அணி 109 ரன்னுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது.
தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 103 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி 2 நாட்களில் டெஸ்ட் போட்டியில் வென்றது இதுவே முதல் முறை.