யோகி பாபுவின் புது கெட் -அப் - வைரலாகும் வீடியோ !
யோகி பாபுவின் புதிய கெட்-அப் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சர்கார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். -
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புதிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கேமரா பில்டர் மூலம் யோகி பாபுவுக்கு பெண் வேடமிடப்பட்டுள்ளது. அப்போது அவரை கன்னத்தில் யாரோ ஒருவர் கிள்ளுகிறார். அவரது கை மட்டுமே வீடியோவில் தெரிகிறது.
இந்த வீடியோவைப் பதிவிட்ட நடிகை வரலட்சுமி, கிள்ளுவது யாருடைய கை என்று கண்டுபிடியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.
Back on the sets of #Sarkar ... guess whose hand..?!? pic.twitter.com/3D4e3yAvlV
— varu sarathkumar (@varusarath) July 16, 2018