பாலா படத்தில் - துருவ் ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா
நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவின் மூலம் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை நடிகர் விக்ரமின் ஃபேவரட் இயக்குனர் பாலா இயக்குகிறார்.
கடந்த ஆகஸ்டு மாதம் தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து வெளியான படம் 'அர்ஜுன் ரெட்டி', வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.
இந்த படம் தமிழில் 'வர்ம' எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக யார் நடிப்பது என்பதை இதுவரை சொல்லாமலேயே வைத்திருந்தனர்.
இப்போது மேகா என்ற மாடல் அழகியை துருவ் ஜோடியாக நடிக்கிறார்.
இவர் 'அமர் பிரேம' என்ற பெங்காலி படத்தில் நடித்துள்ளார். கதக் நடனம் கற்றவர். இவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா.
பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். ரீமேக் என்றாலும் தமிழில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.