விஜயின் சர்கார் போஸ்டரை விமர்சித்து அன்புமணி ராமதாஸ் கருத்து !
விஜய் நடிக்கும் 62வது படத்திற்க்கு "சர்கார்" என பெயரிடப்பட்டு, அதன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும், இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.
விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாலை சர்கார் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டனர் படக்குழுவினர்.
இந்த போஸ்டருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசிடம் இருந்து முதல் எதிர்ப்புக் குரல் வந்துள்ளது.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் யின் போஸ்டரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், போஸ்டரில் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல போஸ் கொடுத்திருப்பதால் அவமானப்படுகிறேன் என்றும்.
Shame on Actor Vijay for promoting Smoking in this first look of his next movie.#ActResponsibly #DoNotPromoteSmoking
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 21, 2018
தனது அடுத்த டிவீட்டில் அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள் என்று கூறியுள்ளார்.
You’ll look more stylish without that cigarette.#SmokingKills #SmokingCausesCancer pic.twitter.com/UUvzgrffHN
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 21, 2018
புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு 2-வது போஸ்டரை வெளியிட்டனர்.