நடிகை திரிஷா 1168 அடி உயரத்தில் தொங்கியப்படி புகைப்படம் !
நடிகை திரிஷா 1168 அடி உயரத்தில் தொங்கியப்படி புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷா படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதை வழக்காமாக கொண்டுள்ளார்.
சுற்றுப் பயணம் செல்லும் இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது நியூயார்க், டொராண்டோ ஊர்களுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பிரபல ரோஜர் மைதானத்தில் நடந்த பேஸ்பால் போட்டியை 1168 அடி உயரத்தில் தொங்கியப்படி பார்க்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.