ரஜினியின் '2.0' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படம் முழுக்க, முழுக்க 3டி கேமராக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். இதனால் கிராஃபிக்ஸ் காட்சி பணிகள் விரைவில் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது ‘2.0’ படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும், என படத்தின் இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் இறுதியாக படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை முடித்து தருவதாக விஎஃபெக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும், இதனால் படம் நவம்பர் மாதம் 29-ம் தேதி திரைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
Hi everyone.. atlast the vfx companies promised the final delivery date of the vfx shots. The movie will release on nov 29th 2018.#2Point0 pic.twitter.com/ArAuo5KxM7
— Shankar Shanmugham (@shankarshanmugh) July 10, 2018
லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.