சூர்யா படத்தில் - ஆர்யா வில்லனாக நடிக்கிறாரா ?
சூர்யா நடிக்கும் 37-வது படத்தில் நடிகர் ஆர்யா நடிப்பதாக இயக்குனர் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார்.
சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும், இந்த படத்திற்கு இன்னும் பெயரிப்படாத இப்படத்தின் பூஜை கடந்த மாதம் 26 -ஆம் தேதி லண்டனில் நடந்தது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ஆர்யா இது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கும், இப்புகைப்படத்தை சூர்யாவின் படத்தில் நடிக்கும் பொமன் இரானி எடுத்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து படக்குழுவினரிடமிருந்து விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.