சிம்புவின் முதல் அரசியல் "மாநாடு" அறிவிப்பு...!
நடிகர் சிம்பு அடுத்த படம் குறித்து முக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.
தற்போது நடிகர் சிம்பு இயக்குநர் மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு சமீபத்தில் தனது இயக்கத்தில், சிம்பு நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் "மாநாடு" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
வெங்கட் பிரபுவின் அடுத்த படம் "மாநாடு" என்றும், அந்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.
The moment all you #Strfans waiting for!!! We are really proud to announce our next #strvp title!! It’s #strmaanaadu #maanaadu #aVPpolitics #vp9 @sureshkamatchi @Deepanboopathy @Vijayakumar1959 @subbu6panchu with all your love and blessings!! #titleposter pic.twitter.com/mg5NWqm0YH
— venkat prabhu (@vp_offl) July 10, 2018
வெங்கட் பிரபு எப்போதும் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி வரும் நிலையில் இப்படத்தின் காமெடியுடன், அரசியலையும் மையமாக வைத்து கதை எடுக்கபடும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். இப்படத்தில் பணிபுரியும் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.