அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் - மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் ரிலீஸ் மே 1ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல்.

வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் (தல 59) பிங்க் பட ரீமேக் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.