மரண மாஸ் - பேட்ட படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியானது!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் முதல் சிங்கிள் டிராக் மரண மாஸ் பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட".
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் முதன்முறையாக அனிருத் இசையமைத்துருக்கிறார்.
இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுவரை 3 போஸ்டர்களை வெளியிட்டுள்ள பேட்ட படக்குழுவினர், நேற்று மாலை 6 மணிக்கு பாடலின் சிங்கிள் டிராக் வீடியோ வை வெளியிட்டனர்.
மரண மாஸ் பாடலை பாடகர் எஸ்.பி. பாலசுப்புரமணியம், அனிரூத் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் வரிகளில், அனிருத் இசையமைப்பில், தர லோக்கலாக பாடல் வரிகள் தொடுக்கப்பட்டு நிலையில், ரசிகர்கள் மத்தியில் அந்தப் பாடல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.