எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

எலிதான் என்னை புலி ஆக்கப்போகுது என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். தற்போது மான்ஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ‘மாயா’, ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது மான்ஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தினை குறித்து இயக்குநர் தெரிவிக்கையில்:-

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள திரைப்படம், குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருந்தாலும் நாங்கள் வேறு வகையில் இந்த படத்தினை எடுத்துள்ளோம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உண்டு.

எஸ். ஜே.சூர்யா இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. அது சம்பந்தப்பட்டக் காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர்.

மேலும் மான்ஸ்டர் என்ற பெயருக்கான அர்த்தத்தை நீங்கள் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என என தெரிவித்திருந்தார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா:-

பல ‘புலி’களோட நடிச்ச என்ன ‘எலி’யோட நடிக்க வைச்சிருக்காங்க. ஆனால் உங்களுக்கு தெரியுமா இந்த ‘எலி’ தான் எதிர்காலத்தில் என்னை ஒரு ‘புலி’யா ஆக்கப் போகுது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையரங்குகளில் என்று தெரிவித்திருக்கிறார்.