ரஜினியின் ‘பேட்ட’ இரண்டாவது போஸ்டர் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துவரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் ‘பேட்ட’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இந்த நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் செம்ம ஸ்டைலிஷாக இளமைத் தோற்றத்தில் இருக்கிறார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுன் மாதத்தில் டேராடூனில் தொடங்கியது. ரஜினிகாந்தின் 165-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு கடந்த மாதம் 7-ம் தேதி ‘பேட்ட’ என்று பெயரிட்டு அதற்கான மோஷன் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.
#PettaSecondLook@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @DOP_Tirru @sureshsrajan @PeterHeinOffl @vivekharshan @VijaySethuOffl @Nawazuddin_S @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/60Td9XWPmS
— Sun Pictures (@sunpictures) October 4, 2018
தற்போது படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.