சர்கார் கொண்டாட்டம் ! - சன் பிக்சர்ஸ் அறிவித்த முதல் அறிவிப்பு !!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் கொண்டாட்டம் செப்டம்பர் 19 முதல் புதுப்புது தகவல்கள் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

தற்போது அந்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் 'சர்கார் கொண்டாட்டத்தின் முதல் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25-ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.