த்ரிஷா - ரஜினிகாந்த் படத்துக்காக ஹேர்ஸ்டைலை முழுவதுமாக மாற்றியுள்ளார் ?
நடிகை த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசையான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பது ஒருவழியாக நிறைவேறியது. இதற்காக தனது ஹேர்ஸ்டைலை முழுவதுமாக மாற்றியுள்ளார் த்ரிஷா.
த்ரிஷா சமீபத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 96 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த 20 - ம் தேதியன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் த்ரிஷா தனது ஹேர்ஸ்டைலை ஷார்ட்டாக மாற்றி புதிய தோற்றத்தில் மாறியுள்ளார். ட்விட்டரில் த்ரிஷாவைப் பின்தொடர்பவர்கள் ரஜினிகாந்த் படத்திற்க்காக இந்தப் புதிய தோற்றமா என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கான விடையை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.