இரண்டு வேடத்தில் அஜித் - 'விஸ்வாசம' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகியுள்ளது.
அஜித், சிவா கூட்டணியில் உருவாகிவரும் `விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தமிழ் மற்றும் ஆங்கிலத் தலைப்புகளுடன் இன்று வெளியாகியுள்ளது.
அஜித்தும், சிவாவும் தீவிரமான சாய்பாபா பக்தர்கள். சாய்பாபாவுக்கு உகந்த தினம் வியாழன். அதனால் இதற்கு முந்தைய சிவா படங்களின் முக்கிய அறிவிப்புகளையும் அவர் வியாழக்கிழமையே வெளியிட்டார்.
இப்போது அதே வியாழன் சென்டிமென்ட்டை கையில் எடுத்து, விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் வெளியான ஒரு சில நிமிடத்தில் தமிழக அளவிலும் அதன் பின்னர் இந்திய அளவிலும் சிறிது நேரத்திற்கு முன்னர் உலக அளவிலும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.
அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இந்த படத்தை குறித்து டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டே இருப்பபதால் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்ற கூறப்பட்ட நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கும், ‘ரெட்டைத்தல’ என்பதை உறுதி செய்துள்ளது.
மேலும் தந்தை மகன் என இரண்டு அட்டகாசமான லுக், அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் பொங்கல் வெளியீடு என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.>