வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கும் தல அஜித் !!!
வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கும் அஜித் "விஸ்வாசம்" படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Exclusive Stills Of THALA AJITH From #Viswasam Shooting Spot!
— iCineMass (@iCine_Mass) September 18, 2018
#ViswasamShootingSpot pic.twitter.com/BWlmLneeNl
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான ரவி அவானா இணைந்துள்ளார். நடிகர் அஜித், ரவி அவனா மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதில் வெள்ளை நிற வேட்டி சட்டையில் அஜித் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.