ரஜினி நடிப்பில் 2.0 படத்தின் 'ஸ்நீக் பீக்' இன்று வெளியானது!
நடிகர் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் ஸ்னீக் பீக் எனப்படும் பிரத்யேக காட்சிகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது.
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் ஸ்டார் அக்ஷ்ய்குமார் நடித்திருக்கும், இந்த படம் நவம்பர் 29 -ம் தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் இது. சுமார் ரூ.543 கோடி செலவில் 2.0 படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் குறித்த மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். 5 நிமிடம் 43 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் படம் உருவான விதம் குறித்து ஷங்கர், நடிகர் அக்ஷ்ய்குமார், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பேசியிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டீசரை ரஜினி மற்றும் ஷங்கரின் ரசிகர்கள் உலகளவில் டிரெண்டாக்கினர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.O படத்தின் ஸ்நீக் பீக் காட்சிகளை இன்று காலை வெளியிடபட்டது.