ஆசிய கோப்பை - பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்தியா !
நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் நேற்று மாலை நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபிராஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து இமாம்-உல்-ஹக் மற்றும் பகர் சமான் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். தொடக்கமே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்திய அணி வீரர்கள், புவனேஷ்குமார் , கேதர் ஜாதவ், பும்ரா, குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இவர்களது பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் 43.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இந்தியா 163 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் தவான் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினர்.
முடிவில் இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.