ஃபிபா (FIFA) உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக பிரான்ஸ் வென்றது!

ஃபிபா(FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் இரண்டாவது முறையாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குரோஷியா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், குரோஷியா அணி ஒரு கோலும் அடித்தன.

ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின.

இந்த போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், குரோஷியா அணி ஒரு கோலும் அடித்தன. இதனால் ஹாஃப் டைமின் போது 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 1998ல் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது.

உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை, அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரான்ஸ் அணிக்கு உலகக்கோப்பையோடு 3.8 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 260 கோடி) பரிசு வழங்கப்பட்டது. ரன்னர் அப் அணியான குரோஷியாவுக்கு 2.8 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.191 கோடி) பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.