விராட் கோலி - டி-20 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்து சாதனை !!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 போட்டிகளில் மிக விரைவாக 2,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

விராட் கோலி 56 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது 2,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

டி-20 போட்டிகளில் விரைவாக 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 56 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தம் 2,011 ரன்கள் எடுத்துள்ளார்.

டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி ஆவார்.

இவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.