தோனி - இன்று 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...!

தோனியின் 37வது பிறந்தநாளில் பல கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தோனியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறது.

மேலும், #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இது தோனிக்கு 500-வது சர்வதேசப் போட்டியாகும்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நேற்றிரவு தோனி தனது குடுபத்தினர் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து தன் பிறந்த நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

தோனி ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 1981ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி பிறந்தார். டி.ஏ.வி ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் பயின்ற தோனி, இளம் வயதிலேயே விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி, தனது திறமையாலும் முயற்சியாலும் உழைப்பாலும் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றி கேப்டன் தோனி.

2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் சாதாரண வீரராக ஆடிவருகிறார்.

#Happy Birthday MSDhoni