இந்தியா அணி சாதனை - தொடர்ச்சியாக 6 டி20 தொடர்களை கைப்பற்றி சாதனை…!

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 6 டி-20 தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி முதல் போட்டியிலும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

முதலில் நடந்த இரண்டு டி20 போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரரான ரோகித் சர்மா ஆரம்பம் முதல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவான் மற்றும் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். பாண்டியா 4 விக்கெட்களை கைப்பற்றி, இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.

இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் ஆறாவது சர்வதேச டி20 தொடர் வெற்றி இதுவாகும்.