நடிகை ரித்விகா - பிக்பாஸ் சீசன் 2 பட்டம் வென்றார் !

நடிகை ரித்விகா பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று நேற்றுடன் முடிந்தது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக 16 பேர் பங்கேற்றனர். ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த்

இவர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இடைப்போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி.

ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.

இறுதியாக ஐஸ்வர்யா கையை முத்தமிட்டுவிட்டு, ரித்விகா கையை உயர்த்தி இவர்தான் டைட்டில் வின்னர் என்று கமல் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார், ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

வாழ்க்கையில் முதல்முறையாக வெற்றியடைந்திருப்பதாகக் கூறிய வாக்களித்த அனைவருக்கும் மனம் திறந்து நன்றி நடிகை ரித்விகா தெரிவித்தார்.