‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ - ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம் !

ஆஸ்கர் விருது தேர்வுக்காக இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாம் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் கருதப்படுகிறது.

91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.

அந்த வகையில் அடுத்த (2019-ம்) ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான, இந்தியா சார்பில் அனுப்பப்பட வேண்டிய படத்தை தேர்வு செய்வதற்கான திரையிடல் நேற்று மும்பையில் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் போட்டியிட்டன.

அதன் முடிவில் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற அஸ்ஸாமி மொழி திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படத்தை ஆஸ்கர் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

வில்லேஹ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படத்தை ரிமா தாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர்தான்.

இந்தப் படத்தில் பனிதா தாஸ், மன்பெண்ட்ரா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.