டெல்லி அருங்காட்சியகத்தில் - சன்னி லியோனுக்கு மெழுகு சிலை !
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வரும் நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெகுழு சிலை வைக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த போர்னோகிராபி நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். தற்போது தமிழ் படம் 'வீரமாதேவி' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேடம் டுசாட் மியூசியத்தில் உலகம் முழுவதும் பிரபலங்களின் தத்ரூப சிலையை வைத்திருப்பார்கள். ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சச்சின், விராட் கோலி என பல பிரபலங்களின் சிலை இங்கு உள்ளது.
அந்த வரிசையில் சன்னி லியோனின் சிலையும் டெல்லியில் உள்ள இந்த மியூசியத்தில் வைக்கப்பட உள்ளது.
இந்த மெழுகு சிலையை நடிகை சன்னி லியோன் திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கவுரவத்திற்காக என்னை தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகான சிலையை செய்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.