சின்னத்திரை நடிகை நிலானி தலைமறைவு - போலீஸ் வலைவீச்சு !
சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனார். இந்த நிலையில் போலீசார் நிலானியை தேடி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் நடிகை நிலானி. இவரைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.கே.நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக கே.கே.நகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர். காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என்று நடிகை நிலானி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கே.கே.நகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர். காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என்று நடிகை நிலானி தெரிவித்திருந்தார்.
நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நடிகை நிலானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து நடிகை நிலானி நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவர் மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலானி அங்கிருந்து திரும்பினார். ஆனால் அவர் மதுரவாயலில் உள்ள வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உள்ள நிலையில், நிலானி திடீரென்று மாயமாகி உள்ளார், அவர் எங்கு உள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.