எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?
விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணியில் நிகழும் மகா புஷ்கரம் விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்:-
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் அரசியலில் ஈடுபடலாம். மருத்துவர்கள், ஆசிரியர்கள், சாதாரண தொழிலாளி உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வரலாம் என்ற போது நடிகர் அரசியலில் வருவதில் மட்டும் சிலருக்கு ஏன் கோபம் வருகிறது.
விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.
தமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர் விஜய். அந்த தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன் என கூறினார்.