கவிஞர் வைரமுத்து - பாடகி சின்மயி பாலியல் புகாருக்கு விளக்கம்

கவிஞர் வைரமுத்து தன் மீதான சின்மயி பாலியல் தொந்தரவு புகாருக்கு விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் மகிவும் பிரபலமானவர் பாடகி சின்மயி. மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமானவர் சின்மயி.

தற்போது கவிஞர் வைரமுத்து எனக்கும், சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி அவரது டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

எனக்கு வைரமுத்துவால் பாலியல் தொல்லை ஏற்பட்டது. கடந்த 2005 (அ) 2006-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது இதை அனுபவித்தேன்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு தன்னையும், தனது தாயாரையும் மட்டும் காத்திருக்குமாறு நிகழ்ச்சி அமைப்பாளர் கேட்டுக் கொண்டதாகவும், அப்போது வைரமுத்து இருக்கும் ஓட்டல் அறைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

எதற்கு தான் வைரமுத்து அறைக்கு செல்ல வேண்டும் என்று கேட்ட போது ஒத்துழைப்பு கொடுக்குமாறு நிகழ்ச்சி அமைப்பாளர் தெரிவித்ததாகவும், இதனை ஏற்க மறுத்த தானும், தனது தாயும் தங்களுக்கு எதுவும் முக்கியம் இல்லை என்று கூறிவிட்டு விமானத்தில் நாடு திரும்பிவிட்டதாகவும் சின்மயி கூறியுள்ளார்.

என்னைப்போல் பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் இதுகுறித்து பேசுவார்கள் என்று நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். ஆனால் இது சரியான நேரம். எனவே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பலரும் இதுகுறித்து பேச வேண்டும் இவ்வாறு பாடகி சின்மயி கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கவிஞர் வைரமுத்து விட்டரில்:-

அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும் என்று இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார்.