நடிகை நயன்தாரா - முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் !
முதல் முறையாக ஐரா படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா.
நயன்தாராவின் 63-வது படத்தை இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ’ஐரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சர்ஜூன் ஏற்கனவே லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களையும், "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்" திரைப்படத்தை இயக்கியவர். இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
"ஐரா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்க்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் முதல் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இதில் ஒரு கெட்டப்பில் தன்னுடைய இயல்பான தோற்றத்தில் இருக்கும் நயன்தாரா, மற்றொரு கெட்டப்பில் கறுப்பு நிறத்தில் சோகமாக இருக்கிறார். இது திகில் படம் என்பதால் நயன்தாராவின் மற்றொரு கெட்டப் பேயாக இருக்கும் என உணர்த்துகிறது.
இந்த படத்தை `கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்டப்பாடி.ராஜேஷ் தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ் குறுகையில்:-
நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து "ஐரா" படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை என்றார்.