நடிகர் விஜய் - குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது !
நடிகர் விஜய் மடியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
— Actor Vijay (@ActorVijayFP) October 23, 2018
இந்நிலையில் நேற்று இரவில் இணையத்தில் புதிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், விஜய் தனது மடியில் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சி விளையாடுகிறார்.
அந்த குழந்தை விஜயிடம் ம்ம்ம்… என்றும் பேச அதற்கு விஜயும் அதே ம்ம்ம்… என்றும் பேசி விளையாடுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.