வெற்றி மாறன் தகவல் - வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி வசனம் நீக்கம்

வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுவதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி வெளியான படம் ’வடசென்னை’. தமிழகம் முழுவதும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் மீனவ சமுதாய மக்களை புண்படுத்தும்படியான காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று மீனவர் நல சங்கத்தினர் வற்புறுத்தினர்.

அந்த சர்ச்சை காட்சிகளையும், வசனங்களையும் நீக்காவிட்டால் வருகிற 29-ந் தேதி சாஸ்திரி பவன் எதிரில் போராட்டம் நடத்துவோம் என்று தணிக்கை குழு அதிகாரிக்கு திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கடிதம் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து சர்ச்சை காட்சிகளை நீக்கி விடுவோம் என்று படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

இயக்குனர் வெற்றிமாறன் கூறும்போது:-

வடசென்னை படம் எந்த ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ பற்றியது அல்ல. படத்தில் கடலுக்குள் அமீரும், ஆண்ட்ரியாவும் நடித்த முதல் இரவு காட்சியையும், சில வசன காட்சிகளையும் நீக்க முடிவு செய்து இருக்கிறோம்.

மேலும் ஒரு தனி நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ புண்படுத்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கின்றோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.