கடம்பூர் ராஜு - சர்கார் பிரச்சனை முடிந்தது
அமைச்சர் கடம்பூர் ராஜு சர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த “சர்கார்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதையடுத்து, சர்கார் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளும், வசனங்களும் நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கடம்பூர் ராஜு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் கடம்பூர் ராஜு கூறியதாவது:-
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மறு தணிக்கைக்கு பிறகு, படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டு அதற்கான பணிகளை முடித்துள்ளது. எனவே சர்கார் திரைப்பட சர்ச்சை முடிவுக்கு வந்தது என இவ்வாறு கடம்பூர் ராஜு தெரிவித்தார்.