நடிகர் ரஜினி - என்னையும் உங்களையும், யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது!!
உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு நான் பெருமைபடுகிறேன் என நடிகர் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை:-
🙏🏻🤘🏻 pic.twitter.com/Lj713Ct0aN
— Rajinikanth (@rajinikanth) October 26, 2018
எண்ணெய் வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
உங்களைப் போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும், யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும் அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.