அஜித் - விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வரும் விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டரை சத்யஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்களுக்கு ரிலீஸாக உள்ளது என்பதையும் படக்குழு உறுதிசெய்துள்ளது.
தூக்குதுரைனா அடாவடி என்று துவங்கும் மோஷன் போஸ்டரின்…" தூக்குத்துரைன்னா அலப்பரை, தூக்குத்துரைன்னா தடாலடி, தூக்குத்துரைன்னா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி என்ற வசனங்களுடன் டி.இமானின் அட்டகாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்த மோஷன் போஸ்டரில் இறுதியில் தல சால்ட் லுக்கில் கெத்தாக வருகிறார்.
இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது என்பதையும் தயாரிப்பு நிறுவனம் மோஷன் போஸ்டரிலேயே உறுதி செய்துள்ளது. மோஷன் போஸ்டர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை மோஷன் போஸ்டர் வீடியோ அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ரனர்.