சர்கார் சர்ச்சை - இலவசப் பொருட்களை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
சர்கார் வெற்றிவிழா கொண்டாடத்தின் போது வெட்டப்பட்ட கேக்கில் இலவசப் பொருட்கள் மிக்ஸி, கிரைண்டர் போன்ற இடம் பெற்றுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை உடைத்து, தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அதிமுகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்ததால் அந்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'சர்கார்' வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் ஊள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
கொண்டாடத்தின் போது வெட்டப்பட்ட கேக்கில் சர்கார் என்ற வாசகம் எழுதப்பட்டதோடு அதை சுற்றி மிக்ஸி, கிரைண்டர் ஆகிய அரசு வழங்கிய இலவசப் பொருட்கள் கேக்கில் இடம்பெற்றிருந்தது.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.
#Sarkar team celebrates the success of the film by cutting a cake pic.twitter.com/pgrAHkCr4q
— iCineMass (@iCine_Mass) November 12, 2018