நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய மகள் சௌந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு நேரில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று காலை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும், கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என் மகள் சவுந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின், மத்திய அமைச்சர், திரு.பொன்ராதா கிருஷ்ணன், திரு.முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திரு.திருநாவுக்கரசர், திரு.அமர்நாத், திரு.கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரை உலகப் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல்துறை நண்பர்கள், திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.