அடிச்சி தூக்கு பாடல் சாதனை- சமூகவலைதளத்தை அதிரவைக்கிறது

இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட்டமாக மாற்றியது கடந்த 10ம் தேதி வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்' திரைப்படம்.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். டி. இமான் இப்படத்திற்கு இசை அமைக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது.

திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இன்று வரை திரையரங்கை நிரப்பி வருகிறது விஸ்வாசம் திரைப்படம். தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி வசூல் சாதனைப் படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் இடம் பெற்ற “அடிச்சி தூக்கு” பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக “அடிச்சி தூக்கு” முழு பாடலை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.

இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஏற்கனவே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற பாடல்கள் என்ற சாதனைகளை படைத்திருந்த ரவுடி பேபி, சிமிட்டான்காரன் சாதனைகளையும் முறியடித்துள்ளது.