அடிச்சி தூக்கு பாடலின் புதிய சாதனை படைத்துள்ளது..!
நேற்று இரவு 7 மணிக்கு விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சி தூக்கு பாடலின் வீடியோ வெளியான ஒரு மணிநேரத்தில் 20 லட்சம் பேர் பார்த்து புதிய சாதனை படைத்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில். அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான ‘அடிச்சி தூக்கு...’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.
மாஸ் குத்தாக உருவாகியுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் இமானே பாடியிருக்கிறார். இந்தப் பாடல் வீடியோவில், அஜித் பாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
அடிச்சிதூக்கு பாடல் வீடியோ வெளியான ஒரு மணிநேரத்தில் 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். இதை பார்த்த சத்யஜோதி பிலிம்ஸ் அந்த சாதனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதும் அந்த வீடியோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.