விஸ்வாசம் - தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது

விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில். அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் நல்ல தொகைக்கு விலைபோனதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஸ்வாசம் படத்தை அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார்.