விஸ்வாசம் - தமிழகத்தில் வசூலில் பேட்ட படத்தை முந்தியது

நேற்று உலகம் முழுவதும் வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், படத்தின் முதல் நாள் வசூலில் யார் முந்தியது என்பது தெரிய வந்துள்ளது.

அஜித் என்றால் ஓபனிங் கிங் என்பார்கள்.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூலில் யார் முந்தியது என்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் வசூலில் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்தியுள்ளது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் நேற்று வெளியானது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா 'நிரஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ. 23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ. 26 கோடி வசூலித்துள்ளது. மேலும் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட படம் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது.

தமிழகத்தில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஸ்வாசம் தான் வசூலில் முன்னிலையில் உள்ளது.